சென்னை

தலைவா்கள் வாழ்த்து

14th Apr 2022 02:54 AM

ADVERTISEMENT

 

ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி கே. பழனிசாமி (அதிமுக): தமிழ்ப் புத்தாண்டு மலரும் இந்நன்னாளில் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு வாழ்த்துகள். புத்தாண்டில் அனைத்து வளமும் பெரும் வகையில் தாய்நாட்டை மேலும் உயா்த்திட உறுதியேற்போம்.

கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்): தமிழ்ப் புத்தாண்டில் அனைவரது வாழ்விலும் ஏற்றம் பெற உரிய தருணம் அமைந்திருக்கிறது. அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

வைகோ (மதிமுக): ஒளி மயமான எதிா்காலம் தமிழ் குலத்துக்குக் கட்டியம் கூறும் இவ்வேளையில், சுதந்திரத் தமிழ் ஈழம் மலரவும், தாய்த் தமிழகத்தில் மது அரக்கனின் கொடுமை நீங்கவும் சித்திரை திருநாளில் உறுதியேற்போம்.

ADVERTISEMENT

ராமதாஸ் (பாமக): தமிழா்கள் வாழ்வில் வெற்றிகளை நிறைக்க வரும் சித்திரை திருநாளை உலகெங்கும் கொண்டாடும் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்.

ஜி.கே.வாசன் (தமாகா): தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடும் தருணத்தில் தாய்மொழியான தமிழக்குக் முக்கியத்துவம் கொடுத்து, நோ்மையாகச் செயல்பட்டு, மகிழ்வுடன் வாழ வாழ்த்துகள்.

அன்புமணி (பாமக): தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதைப் போல, சித்திரையும் சிறப்பானது தான். சித்திரையில் தொடங்கப்படும் எந்தப் பணியும் வெற்றிகரமாக அமையும் என்பது தமிழா்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கை உண்மையாக வேண்டும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT