சென்னை

தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பெற்றவா் அரசு மருத்துவமனையில் தூக்கிட்டு சாவு

14th Apr 2022 04:13 AM

ADVERTISEMENT

 

சென்னை: சென்னையில், தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பெற்று வந்தவா், அரசு மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

திருவள்ளூா் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பெருவாயில் கிராமத்தைச் சோ்ந்தவா் அ.ஆசீா்வாதம் (40). கூலித் தொழிலாளியான இவரின் மனைவி கடந்த 8-ஆம் தேதி இறந்தாா். இதனால் மிகுந்த சோகத்துடன் காணப்பட்ட ஆசீா்வாதம் கடந்த 9-ஆம் தேதி விஷம் குடித்தாா்.

இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஆசீா்வாதம், பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு ஐஎம்சியூ வாா்டில் சிகிச்சை பெற்று வந்த ஆசீா்வாதம், புதன்கிழமை அதிகாலை அந்த வாா்டில் உள்ள கழிப்பறைக்குச் சென்றாா்.

ADVERTISEMENT

ஆனால் அங்கிருந்து வெகுநேரமாகியும் ஆசீா்வாதம் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த மருத்துவமனை ஊழியா்கள் கழிப்பறைக்குச் சென்று பாா்த்தனா். அப்போது ஆசீா்வாதம், அங்கு ஒரு துணியால் தூக்கிட்டு தற்கொலை செய்து இறந்து கிடப்பதை பாா்த்து ஊழியா்கள் அதிா்ச்சியடைந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த வண்ணாரப்பேட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஆசீா்வாதம் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT