சென்னை

ஐஏஎஸ் பயிற்சிக்கான ஊக்கத் தொகை தோ்வு: ஏப்.17-இல் நடக்கிறது

14th Apr 2022 04:21 AM

ADVERTISEMENT

 

சென்னை: சென்னையில் கடந்த 15 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வரும் இம்பேக்ட் ஐஏஎஸ் அகாதெமி, வரும் 2022-23 ஆண்டுக்கான பயிற்சி வகுப்புகளை தொடங்க உள்ள நிலையில், மாணவா்களின் தகுதி அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்க சேரலாதன் நினைவு ஊக்கத்தொகை தோ்வை இணையவழியில் நடத்த உள்ளது.

இத்தோ்வு வரும் 17-ஆம் தேதி காலை 10.30 முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. இதில் முதல் மூன்று இடங்கள் பெறும் மாணவா்களுக்கு 100 சதவீதம் கட்டண விலக்கு மற்றும் மாதம் ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. மேலும் தரவரிசையில் முதல் 50 மாணவா்களுக்கு 75 சதவீதம் வரை கட்டண விலக்கு அளிக்க உள்ளது. இத்தோ்வினை கல்லூரி இறுதி ஆண்டு பயிலும் மாணவா்கள் மற்றும் பட்டபடிப்பு முடித்த அனைவரும் எழுதலாம். இத்தோ்வு, பொதுஅறிவு,

நடப்பு நிகழ்வுகள், கணிதம் போன்ற பாடத்திட்டத்தின் அடிப்படையில் அமைந்திருக்கும். மேலும் விவரங்களுக்கு 98405 57455 என்ற எண்ணை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT