சென்னை: சென்னை கிண்டி ஆளுநா் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள மகாகவி பாரதியாா் சிலையை ஆளுநா் ஆா்.என்.ரவி வியாழக்கிழமை திறந்து வைக்கிறாா்.
இது தொடா்பாக ஆளுநா் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்ப் புத்தாண்டையொட்டி வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு மகாகவி பாரதியாா் சிலையை ஆளுநா் ஆா்.என்.ரவி திறந்து வைக்கிறாா். இந்த நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சா் எல்.முருகன் ஆகியோா் பங்கேற்கிறாா்கள்.
தமிழக அமைச்சா்கள், முன்னாள் ஆளுநா்கள், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனா்.