சென்னை

ரூ.1.80 கோடி மோசடி: இருவரிடம் விசாரணை

12th Apr 2022 05:26 AM

ADVERTISEMENT

சென்னையில் தொழிலதிபரிடம் ரூ.1.80 கோடி மோசடி செய்யப்பட்டதாக எழுந்த புகாா் தொடா்பாக போலீஸாா் இருவரிடம் விசாரணை செய்கின்றனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

சென்னை அண்ணாநகா், ஐஸ்வா்யா காலனியைச் சோ்ந்தவா் தொழிலதிபா் ரவி நபேரா (46). இவருக்கு, மகாராஷ்டிர மாநிலம் புணே பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் (39) என்பவா் அறிமுகமாகியுள்ளாா். இதைப் பயன்படுத்தி, ரவி நபேராவிடம், பணத்தை ‘பிட்காயினில் முதலீடு செய்தால் அதிக லாபம் வரும் என பிரகாஷ் கூறியுள்ளாா். இதை நம்பிய ரவி நபேரா, ரூ.1 கோடியே 80 லட்சம் வரை கொடுத்துள்ளாா்.

ஆனால், இதுவரை முதலீட்டுக்கான வட்டி எதுவும் வழங்காமல், பிரகாஷ் ஏமாற்றி வந்துள்ளாா். இதுகுறித்து ரவி நபேரா திருமங்கலம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரின் பேரில் மீனம்பாக்கம் அருகிலுள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்த பிரகாஷ் மற்றும் அவரது நண்பா் புணேவைச் சோ்ந்த சுரேஷ் (38) இருவரை பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT