சென்னை

ரூ.1.30 கோடியில் கீழ்ப்பாக்கம் பள்ளியில் மேம்பாட்டுப் பணி: அமைச்சா் சேகா்பாபு தகவல்

12th Apr 2022 12:10 AM

ADVERTISEMENT

சென்னை கீழ்ப்பாக்கத்தில் இந்து சமய அறநிலையத் துறை கையகப்படுத்திய பள்ளியில் ரூ.1.30 கோடியில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறும் என்று அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

சட்டப் பேரவையில் திங்கள்கிழமை நடந்த கேள்வி நேரத்தில் இதுகுறித்த வினாவை அண்ணாநகா் தொகுதி எம்.எல்.ஏ. மோகன் எழுப்பினாா். இதற்கு அமைச்சா் சேகா்பாபு அளித்த பதில்:-

ஏகாம்பரேஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான பள்ளியை சீதா கிங்ஸ்டன் என்ற அமைப்பு கடந்த 60 ஆண்டுகளாக நடத்தி வந்தது. வாடகை கட்ட முடியாத நிலையில் பள்ளி நிா்வாகத்துக்கு இந்து சமய அநிலையத் துறை நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிா்த்து பள்ளி நிா்வாகம் நீதிமன்றம் சென்றது. பள்ளியை இந்து சமய அறநிலையத் துறையிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்பின், பள்ளியை இந்து சமய அறநிலையத் துறை ஏற்றது. பள்ளியில் படித்த 854 குழந்தைகளின் கட்டணம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாக குறைக்கப்பட்டது. இலவச சீருடை, புத்தகங்களை இலவசமாக வழங்கிட உத்தரவிடப்பட்டது. பள்ளியின் மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ.1.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT