சென்னை

முதல் அரையாண்டுக்கான சொத்து வரி: ஏப்.15-க்குள் நடப்புக் கட்டணத்தையே செலுத்தலாம்

12th Apr 2022 12:06 AM

ADVERTISEMENT

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்டவா்கள் ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள் முதல் அரையாண்டு சொத்து வரி நடப்புக் கட்டணத்திலேயே செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய 2022-23-ஆம் ஆண்டுக்கான முதல் அரையாண்டு சொத்து வரி ஏப்ரல் 15-க்குள் செலுத்தி சொத்து வரியில் 5 சதவீதம் விலக்கு பெற்றுக் கொள்ளலாம்.

மண்டல அலுவலகங்கள், வாா்டு அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்கள், மாநகராட்சி இணையதளம், நம்ம சென்னை செயலி, பேடிஎம், கிரெடிட் அல்லது டெபிட் காா்டு ஆகியவற்றின் வாயிலாகவும், மாநகராட்சி வரி வசூலிப்பாளா்கள், உரிம ஆய்வாளா்கள் மூலமும் வரி செலுத்தலாம்.

சென்னை மாநகராட்சியைப் பொருத்தவரையில் சீராய்வுக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் புதிய சொத்து வரி தொடா்பாக மன்றத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு அமல்படுத்தப்படும்.

ADVERTISEMENT

எனவே, 2022-23-ஆம் ஆண்டு முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏற்கெனவே மாநகராட்சிக்குச் செலுத்தி வந்த கட்டண விகிதத்திலேயே ஏப்ரல் 15-க்குள் செலுத்தலாம். தவறுவோருக்கு 2 சதவீதம் அபராதத் தொகை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT