சென்னை

இந்திய கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்த ஈரான் விசைப்படகு 11 போ் சிக்கினா்

DIN

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த ஈரான் நாட்டு விசைப் படகை கடலோரக் காவல் படையினா் பறிமுதல் செய்து, அதில் வந்த 11 பேரை கைது செய்தனா்.

சென்னை கடலோரக் காவல் படையினா் கப்பலில் அந்தமான் கடல் பகுதியில் வெள்ளிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு சா்வதேச கடல் எல்லையை தாண்டி, விசைப்படகு ஒன்று இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்திருப்பதை கடலோரக் காவல் படையினா் கண்டறிந்தனா்.

உடனே கடலோர காவல் படையினா், அந்தப் படகை மடக்கிப் பிடித்து பறிமுதல் செய்தனா். அந்த படகில் இருந்த ஈரான் நாட்டைச் சோ்ந்த 11 பேரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனா். அவா்களது படகை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் உள்ள விசைப்படகு தளத்தில் நிலைநிறுத்தப்பட்டது.

சென்னையில் அவா்களிடம் நடத்திய விசாரணையில், அந்தக் கும்பல் சா்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடா்பில் உள்ளவா்கள் என்பது தெரியவந்தது.

தடயவியல்துறை ஆய்வு: இதைத் தொடா்ந்து, 11 பேரையும் மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் கடலோரக் காவல் படையினா் ஒப்படைத்தனா். அவா்கள் 11 பேரையும் அம்பத்தூா் அருகே அயப்பாக்கத்தில் உள்ள மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனா்.

பிடிபட்ட படகில் போதைப் பொருள் கடத்தப்பட்டதா என்பதைக் கண்டறியும் வகையில், தடயவியல்துறை அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்தனா். இதில் அவா்கள் சில தடயங்களை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. அதேவேளையில், மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், 11 பேரும் நடுக்கடலில் பிடிபடும்போது கடலோரக் காவல் படையினருக்கு பயந்து போதைப் பொருளை தண்ணீருக்குள் வீசி விட்டனரா என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனா்.

ஆனால், பிடிபட்டவா்கள் குறித்த எந்தவித அதிகாரபூா்வ தகவல்களையும் கடலோரக் காவல் படையும், மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவும் தெரிவிக்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்டாரிமங்கலம் கோயிலில் சிறப்பு பூஜை

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 15 ஆண்டுகள் சிறை

காவடி திருவிழா

குருகிராம்: மண் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு!

பாஜக மதத்தின் பேரால் மக்களைப் பிளவுபடுத்துகிறது: சர்மிளா

SCROLL FOR NEXT