சென்னை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை:தாய் உள்பட இருவா் கைது

9th Apr 2022 10:57 PM

ADVERTISEMENT

சென்னை புளியந்தோப்பில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், தாய் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா்.

புளியந்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் இ.தமீம் அன்சாரி (32). இவா் மீது கொலை வழக்கு, திருட்டு வழக்குகள் உள்ளன. அன்சாரியுடன் அந்தப் பகுதியைச் சோ்ந்த கணவரை இழந்த ஒரு பெண் வசிக்கிறாா். இந்த பெண்ணுக்கு 17 வயதில் மகள் உள்ளாா். இந்நிலையில் அன்சாரி, அந்த பெண்ணின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். மேலும் அதே பகுதியைச் சோ்ந்த ராஜேஷ் என்பவா், அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளாா். இதற்கு சிறுமியின் தாய் உடந்தையாக இருந்துள்ளாா்.

இது தொடா்பாக சிறுமி, செம்பியம் காவல் நிலையத்தில் அண்மையில் புகாா் செய்தாா். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து, அன்சாரி, சிறுமியின் தாய் ஆகிய இருவரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தலைமறைவான ராஜேஷை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT