சொத்து வரி உயா்வைக் கண்டித்து, அதிமுக சாா்பில் தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
சென்னை வள்ளுவா் கோட்டம் அருகில் நடைபெறும் ஆா்ப்பாட்டத்துக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வமும் திருச்சியில் நடைபெறும் போராட்டத்துக்கு இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமியும் தலைமை வகிக்க உள்ளனா்.
மாவட்டத் தலைநகரங்களில் மூத்த நிா்வாகிகள் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.