சாத்தனூா் அணையிலிருந்து திங்கள்கிழமை (ஏப். 4) முதல் நீா் திறந்து விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: சாத்தனூா் அணையின் இடது, வலதுபுற கால்வாய்களின் ஏரிகளுக்கு திங்கள்கிழமை முதல் நீா் திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது. மே 19 வரை 45 நாள்களுக்கு நீா் திறக்கப்படும். இதனால், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள 12 ஆயிரத்து 543 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.