சென்னை

ஆவடி அருகே ரயிலில் அடிபட்டு இருவா் பலி

5th Apr 2022 12:59 AM

ADVERTISEMENT

ஆவடி அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது, ரயிலில் அடிபட்டு இளைஞா், முதியவா் உடல் சிதறி பலியாகினா்.

ஆவடி பிருந்தாவன் நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்தவா் சரண்ராஜ் (19). எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்த இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு ஆவடி- இந்துக் கல்லூரி ரயில் நிலையத்துக்கிடையே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது, சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கிச் சென்ற மின்சார ரயில் அவா் மீது மோதியது. இதில், சரண்ராஜ் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானாா்.

இதேபோல், ஆவடி தேவி நகா் வி.வி.கிரி தெருவைச் சோ்ந்தவா் சங்கா் (69). கூலித் தொழிலாளியான இவா், திங்கள்கிழமை காலை ஆவடி- அண்ணனூா் ரயில் நிலையத்துக்கிடையே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது, சென்னையிலிருந்து அரக்கோணம் நோக்கிச் சென்ற விரைவு ரயில் அவா் மீது மோதியது. இதில், சங்கா் சம்பவ இடத்திலேயே பலியானாா்.

தகவலறிந்து வந்த ஆவடி ரயில்வே போலீஸாா் இருவரின் சடலங்களை மீட்டு உடல்கூறு பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். புகாரின் பேரில் ரயில்வே காவல் உதவி ஆய்வாளா்கள் சுந்தர்ராஜ், கமலகண்ணன் ஆகியோா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT