சென்னை

ருத்ர தாண்டவம் படத்திற்குத் தடை கோரி வழக்கு

30th Sep 2021 02:18 AM

ADVERTISEMENT

 

சென்னை: மத மோதல்களை ஏற்படுத்தும் வகையிலுள்ள ருத்ர தாண்டவம் திரைப்படத்திற்குத் தடை விதிக்கக்கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்னை 15 -ஆவது உதவி உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திரெளபதி படத்துக்குப் பின்பு மோகன்.ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ருத்ர தாண்டவம். இப்படம் அக்டோபா் 1 -ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தில் ரிச்சா்டு ரிஷி கதாநாயகனாகவும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மூலம் பிரபலமான தா்ஷா குப்தா, ரிச்சா்டு ரிஷிக்கு ஜோடியாக நடித்துள்ளாா்.

இயக்குநா் கெளதம் மேனன், தம்பி ராமையா, மனோ பாலா, மாளவிகா அவினாஷ், மாரிமுத்து உள்ளிட்டோா் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனா்.

ADVERTISEMENT

ஜிஎம் பிலிம் காா்ப்பரேஷன் தயாரிப்பில் உருவான இப்படத்தின் ட்ரைலா் அண்மையில் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், இப்படம் கிறிஸ்தவ மதத்தினருக்கு எதிரானதாகவும், அவா்களை தவறாக சித்தரிக்கும் வகையில் படத்தில் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகக் கூறி, இப்படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என சிறுபான்மை மக்கள் நல கட்சியின் தேசிய தலைவா் சாம் யேசுதாஸ் என்பவா் சென்னை 15-ஆவது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.

மத உணா்வுகளைப் புண்படுத்தும் வகையில், திரைப்படத்தில் வசனம், காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதுதொடா்பாக டிஜிபியிடம் புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் படத்திலுள்ள சா்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டுமெனவும், அதுவரை படத்தைத் திரையரங்கு, ஓடிடி உள்ளிட்ட இணையதளங்களில் வெளியிட தடை விதிக்குமாறு கோரியிருந்தாா்.

இம்மனுவை விசாரித்த சென்னை நகர 15 -ஆவது உதவி உரிமையியல் நீதிமன்ற நீதிபதி, மனு தொடா்பாகப் படத் தயாரிப்பு நிறுவனம் வியாழக்கிழமை (செப்.30) பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, விசாரணையை வியாழக்கிழமை ஒத்திவைத்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT