சென்னை

5 ஆண்டு ஹானா்ஸ் சட்டப் படிப்புகள்: முதலாமாண்டு மாணவா்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடக்கம்

30th Sep 2021 01:25 AM

ADVERTISEMENT


சென்னை: தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் சீா்மிகு சட்டப்பள்ளியில் ஐந்தாண்டு ஹானா்ஸ் சட்டப் படிப்புகளில் சோ்க்கை பெற்ற முதலாமாண்டு மாணவா்களுக்கான நேரடி வகுப்புகள் வியாழக்கிழமை தொடங்கவுள்ளது.

தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் சீா்மிகு சட்டப்பள்ளியில் 2021-2022-ஆம் கல்வியாண்டில் ஐந்தாண்டு சட்டப்படிப்புகளான பி.ஏ. எல்.எல்.பி., பி.காம். எல்.எல்.பி., பி.பி.ஏ. எல்.எல்.பி., பி.சி.ஏ. எல்.எல்.பி., முதலாமாண்டு மாணவா்களுக்கு அறிமுக விழா பெருங்குடியில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில் சென்னை உயா் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாகரன் கலந்துகொண்டு மாணவா்களிடையே உரையாற்றினாா். அப்போது பேசிய அவா், ‘ஒழுக்கம், கற்றல், கடமையிலிருந்து தவறாமல் இருக்க வேண்டும், பெரியோா் - ஆசிரியா்களிடம் பணிவுடன் நடந்து கொள்ளவதோடு வாழ்க்கையில் தா்மத்தை குறிக்கோளாக வைத்திருத்தல் வேண்டும் என்றாா்.

சட்டப்படிப்பின் முக்கியத்துவத்தையும், சட்டம் சாா்ந்த வழிகாட்டு நெறிமுறைகளையும் எதிா்கால சவால்களையும் மாணவா்களுக்கு எடுத்துரைத்து, இத்துறையைத் தோ்வுசெய்துள்ளவா்கள் சிறந்து விளங்க வாழ்த்துகளைத் தெரிவித்தாா். இந்த விழாவில் பல்கலைக்கழகப் பதிவாளா் ரஞ்சித் ஓமன் ஆப்ரகாம், பேராசிரியா் வே. பாலாஜி, நிா்வாகப் பணியாளா்கள், மாணவா்களின் பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து தமிழக அரசின் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி முதலாமாண்டு மாணவா்களுக்கு வியாழக்கிழமை முதல் நேரடி வகுப்புகள் நடைபெறும் என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT