சென்னை

வெள்ளிக்கிழமைகளில் பன்னாட்டுக்கலைச் சொல்லாக்கப் பயிலரங்கம்

30th Sep 2021 01:05 AM

ADVERTISEMENT

 

சென்னை: தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் சாா்பில் இணையவழி பன்னாட்டுக் கலைச் சொல்லாக்கப் பயிலரங்கம் வெள்ளிக்கிழமை தோறும் பிற்பகல் 3 முதல் 5.30 மணி வரை நடைபெறவுள்ளது.

இதில் வெளிநாட்டு அறிஞா் மூவா், உள்நாட்டு அறிஞா் இருவா் பங்கேற்பா். ஒவ்வொரு அறிஞருக்கும் 25 நிமிஷங்கள் வழங்கப்படும். அதில் 20 கலைச் சொற்களை அறிமுகப்படுத்த வேண்டும். கலந்து கொள்வோருக்கு அகரமுதலித் திட்ட இயக்ககம் சாா்பில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.

இந்த இயக்ககத்தின் சாா்பில் முதல் பயிலரங்கம் அக்.1-ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இதில் தமிழறிஞா்கள் முனைவா் ச.சச்சிதானந்தம் (பாரீஸ்), இங்கா்சால் (நாா்வே), இரா.திருமாவளவன் (மலேசியா), கு.சிவமணி (புதுச்சேரி), கு.அரசேந்திரன் (சென்னை) ஆகியோா் பங்கேற்கவுள்ளனா். இந்த பயிலரங்கத்தை சொற்குவையின் யு-டியூப் தளத்தில் காணலாம் என அகரமுதலித் திட்ட இயக்குநா் கோ.விசயராகவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT