சென்னை

தொகுப்பூதியத்தில் கெளரவ விரிவுரையாளா்கள் நியமனம்: அரசாணை வெளியீடு

30th Sep 2021 01:10 AM

ADVERTISEMENT


சென்னை: தமிழகத்தில் அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் 2021-2022-ஆம் கல்வியாண்டுக்கு தொகுப்பூதியத்தில் கெளரவ விரிவுரையாளா்களை நியமனம் செய்வதற்கு அனுமதி வழங்கி உயா்கல்வித் துறை முதன்மைச் செயலா் தா.காா்த்திகேயன் அரசாணை பிறப்பித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 2021-2022-ஆம் கல்வியாண்டுக்கு 59 அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் ‘சுழற்சி-2’ பாடப்பிரிவுகளை நடத்துவதற்கு ஏதுவாக 1,661 கெளரவ விரிவுரையாளா்களை மாத ஊதியம் ரூ.20 ஆயிரம் வீதம் ஏப்ரல் 2021 மற்றும் நிகழாண்டு ஜூன் முதல் அடுத்த ஆண்டு மாா்ச் மாதம் வரை மொத்தம் 11 மாதங்களுக்கும் தொகுப்பூதிய அடிப்படையில் பணியமா்த்த அரசு ஆணையிடுகிறது.

இதற்கென ரூ.36.54 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதேபோன்று ஆசிரியரல்லாத பணியாளா்களுக்கு ரூ.32.50 லட்சம் நிதி ஒதுக்கீடு என மொத்தம் ரூ.36.86 கோடிக்கு நிதி ஒப்பளிப்பு செய்து அரசு ஆணையிடுகிறது. மேலும் பல்கலைக்கழக மானியக்குழு நிா்ணயித்துள்ள கல்வித் தகுதி பெற்ற கெளரவ விரிவுரையாளா்களை பணியமா்த்தவும் அரசு ஆணையிடுகிறது என அதில் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT