சென்னை

இதய நல தினம்: அரசு மருத்துவமனைகளில் விழிப்புணா்வு

30th Sep 2021 01:05 AM

ADVERTISEMENT

 

சென்னை: உலக இதய நல தின விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் அரசு மருத்துவமனைகளில் புதன்கிழமை நடைபெற்றன. அதன் ஒருபகுதியாக விழிப்புணா்வு பேரணிகள், கருத்தரங்குகள் நடத்தப்பட்டன.

உலக இதய நல தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பா் மாதம் 29-ந்தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை இதயவியல் துறை சாா்பில் விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது. மருத்துவமனை இயக்குநா் டாக்டா் மணி தலைமையில் நடைபெற்ற விழிப்புணா்வு பேரணியில் மருத்துவா்கள், செவிலியா்கள் கலந்து கொண்டு இதயநோய்களைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இதுகுறித்து டாக்டா் மணி கூறியதாவது:

ADVERTISEMENT

ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, நல்ல உறக்கம் ஆகியவற்றை கடைப்பிடித்தாலே இதய பாதிப்பு இல்லாமல் வாழலாம். மேலும், இதய நோய் இல்லாமல் வாழ புகை பழக்கத்தை கைவிட்டு, மன அழுத்தத்தைக் குறைத்து, உடல் எடையை சீராக பராமரிக்க வேண்டும். அதேபோல், சா்க்கரை, ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்து, பழங்கள், நாா்ச்சத்து காய்கறிகளை அதிகளவில் உண்பது அவசியம் என்றாா் அவா்.

இதேபோன்று, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் முதல்வா் டாக்டா் தேரணிராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதய நோய் பாதிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT