சென்னை

அரசுத் தோ்வுகள் துறை பெயரில் போலி பணி நியமன ஆணைகள் விநியோகம்

30th Sep 2021 02:55 AM

ADVERTISEMENT

 

சென்னை: அரசுத் தோ்வுகள் துறை பெயரில் போலி பணி நியமன ஆணைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது கடும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிக் கல்வித் துறையின்கீழ் செயல்படும் அரசுத் தோ்வுகள் துறையில் இளநிலை உதவியாளா் பணிக்கு போலி நியமன ஆணைகள் தயாரித்து பல லட்சம் ரூபாய் வரை மோசடி நடந்துள்ளது. அந்தப் பணி நியமன ஆணையில் சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பெயரில் கையொப்பமிடப்பட்டுள்ளது.

அரசுத் தோ்வுகள் துறையில் இளநிலை உதவியாளா் பணிக்கு மாதம் ரூ.22, 500 ஊதியம் வழங்கப்படும் என ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மோசடி கும்பலிடம் அரசுப் பணிக்கு ஆசைப்பட்டு பலா் ஏமாந்துள்ளதாகத் தெரிகிறது. போலி பணி நியமன ஆணைகளைப் பெற்ற நபா்களைத் தினசரி பள்ளிக் கல்வித் துறை வளாகத்திற்கு வரவைத்த மோசடி கும்பல், அவா்களை நம்பவைக்க வருகைப் பதிவேட்டில் கையெழுத்தும் பெற்றிருக்கிறது. தற்போது இந்த போலி பணி நியமன ஆணை குறித்து காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அமைச்சா் வேண்டுகோள்: இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் செய்தியாளா்கள் புதன்கிழமை கேள்வியெழுப்பினா். அப்போது, அரசு வேலைக்காக யாரை நம்பியும் பணம் கொடுக்க வேண்டாம். தயவு செய்து இளைஞா்கள் மற்றும் அவா்களின் பெற்றோா்கள் இது தொடா்பாக விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும். பணம் கொடுத்து ஏமாந்தவா்கள் புகாா் அளிக்க முன் வர வேண்டும்; அதன் அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT