சென்னை

வேளச்சேரியில் தாயை கொலை செய்த மகன் கைது

DIN

சென்னை: வேளச்சேரியில் நேற்று, குடிக்கப் பணம் தர மறுத்த தாயை கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார்.

வேளச்சேரி, நேருநகர், திரு.வி.க தெருவைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மனைவி லட்சுமி, நேற்று (19.09.2021) இரவு 8.30 மணியளவில் தனது கணவர் ராமலிங்கத்துடன் வீட்டிலிருந்த போது, அங்கு குடிபோதையில் வந்த அவரது மகன் மூர்த்தி, தாயார் லட்சுமியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். 

தாய் லட்சுமி பணம் தர மறுக்கவே, ஆத்திரமடைந்த மூர்த்தி வீட்டிலிருந்த கத்தியால் தாய் லட்சுமியை தாக்கி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

படுகாயமடைந்த லட்சுமி சம்பவயிடத்திலேயே இறந்து விட்டார். தகவலறிந்த வேளச்சேரி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவயிடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.

வேளச்சேரி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டை நடத்தி தாயை கொலை செய்த மூர்த்தியை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் காவல்துறையினரின் விசாரணையில் கைது செய்யப்பட்ட மூர்த்தியின் மனைவி கடந்த ஒருவருடத்திற்கு முன்பு மூர்த்தியைவிட்டு பிரிந்து சென்றுள்ளார். இதனால் மூர்த்தி சரிவர வேலைக்குச் செல்லாமல் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, அடிக்கடி தனது தயாரிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்துள்ளதும், சம்பவத்தன்று குடிப்பதற்கு பணம் தர மறுத்ததால் மூர்த்தி தனது தாய் லட்சுமியை கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட குற்றவாளி மூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT