சென்னை

வண்டலூர் வெளிவட்ட சாலைக்கு நிலம் கையகப்படுத்தியது செல்லும்: உயர் நீதிமன்றம்

18th Sep 2021 12:57 PM

ADVERTISEMENT


சென்னை வெளிவட்ட சாலைக்கான நிலத்தை அரசு கையகப்படுத்துவது தொடர்பாக பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வெளிவட்ட சாலைக்கான நிலத்தை அரசு கையகப்படுத்தும் உத்தரவை எதிர்த்து, நில உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று இந்த தீர்ப்பை அளித்துள்ளது.

விசாரணையின் போது, நெடுஞ்சாலைகள் துறை, நிலத்தைக் கையகப்படுத்துவதற்கான சட்ட நடைமுறைகளை சரியாக பின்பற்றவில்லை என மனுதாரர்கள் தரப்பும் முறையாக பின்பற்றப்பட்டதாக அரசு தரப்பும் விளக்கம் அளிக்கப்பட்டது.

வண்டலூர்  - நெமிலிச்சேரி இடையே சென்னை வெளிவட்ட சாலைக்காக 29.65 கி.மீ. தூரத்துக்கு நிலத்தைக் கையகப்படுத்த அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நிலத்தை கையகப்படுத்துவதற்கான அனைத்து நடைமுறைகளையும் அரசு முறையாகப் பின்பற்றியிருப்பதாகக் கூறி, வழக்கு முடித்து வைக்கப்படுவதாக தீர்ப்பளித்துள்ளது.
 

ADVERTISEMENT

Tags : Vandalur chennai
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT