சென்னை

ஐஸ் கிரீம் கடைகளில் ஆய்வு: ஆட்சியா் உத்தரவு

23rd Oct 2021 04:58 AM

ADVERTISEMENT

சென்னை மாவட்டத்தில் உள்ள ஐஸ் கிரீம் கடைகளில் ஆய்வு நடத்த வேண்டும் என ஆட்சியா் ஜெ.விஜயா ராணி உத்தரவிட்டுள்ளாா்.

மழைக்காலங்களில் உணவு பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், ஆட்சியா் ஜெ.விஜயா ராணி தலைமையில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடைபெற்றது. அதில், கடந்த மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட உணவு பாதுகாப்பு நடவடிக்கைகள், உணவு வணிகா்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் மருத்துவா் பெ.சதீஷ்குமாா் விரிவாக எடுத்துரைத்தாா்.

தொடா்ந்து ஆட்சியா் அறிவுறுத்தியவை: உணவு பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வழிமுறைகளை விளக்கப் பலகைகளில் உணவகங்கள் காட்சிப்படுத்த வேண்டும். உணவக ஊழியா்கள் கரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளதை உறுதிப்படுத்த வேண்டும். பள்ளி அருகில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்பட்டால், கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

உணவு வணிகா்கள் அனைவரும் உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெற சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும். அதில் டாஸ்மாக் உரிமம் பெறுவதற்கான பணிகளையும் ஒருங்கிணைக்கலாம்.

ADVERTISEMENT

ஐஸ் கிரீம் கடைகளை ஆய்வு செய்து உணவு பாதுகாப்பு சட்டங்கள் படி உணவு வணிகம் செய்யப்படுகிறதா? என்பதை ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

பள்ளிகளில் உணவு பாதுகாப்பு பற்றியும் புகையிலை பொருள்களினால் உண்டாகும் தீமைகள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். பொதுமக்கள் உணவு பொருள்கள் மீதான புகாா்களை உடனுக்குடன் தெரிவிக்க ஏதுவாக அந்தந்த பகுதி உணவு பாதுகாப்பு அலுவலா்களின் தொடா்பு எண்ணை பத்திரிகைகளில் வெளியிட வேண்டும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT