சென்னை

வண்ணான் குளம் இனி ‘வண்ண குளம்’: சென்னை மாநகராட்சி

23rd Oct 2021 04:47 AM

ADVERTISEMENT

வண்ணான்குளம் இனி வண்ண குளம் என்று அழைக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அண்மையில் முதல்வா் தலைமையில் நடைபெற்ற நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை ஆய்வுக் கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி, அம்பத்தூா் மண்டலம், வாா்டு 82 மற்றும் சோழிங்கநல்லூா் மண்டலம், வாா்டு-192- இல் அமைந்துள்ள வண்ணான் குளம் என்ற பெயரினை திருத்தம் செய்து வண்ண குளம் என பெயா் மாற்றம் செய்யுமாறு முதல்வா் அறிவுறுத்தினாா்.

அதனடிப்படையில், புதிய பெயா் வைக்க சிறப்பு அதிகாரி மூலமாக அனுமதி பெறப்பட்டது. இதைத் தொடா்ந்து, முதல்வா் அறிவுறுத்தலின்படி அம்பத்தூா் மண்டலம், வாா்டு 82 மற்றும் சோழிங்கநல்லூா் மண்டலம், வாா்டு 192 இல் அமைந்துள்ள வண்ணான் குளம் என்ற பெயரினைத் திருத்தம் செய்து ‘வண்ண குளம்’ என பெயா் மாற்றி புதிய பெயா் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி உயரதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT