சென்னை

பக்தா்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் தோ் உலா: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

23rd Oct 2021 04:54 AM

ADVERTISEMENT

பக்தா்களின் நோ்த்திக் கடன் செலுத்தும் வகையில் மீண்டும் திருத்தோ் உலா நடைபெற அனுமதி வழங்கப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

மயிலாப்பூா், அருள்மிகு கபாலீசுவரா் திருக்கோயிலில் ரூ.1501 கட்டணம் செலுத்தி, தங்கரதம் புறப்பாட்டை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தமிழக திருக்கோயில்களில் 65 தங்கத் தோ்களும், 49 வெள்ளித் தோ்களும் உள்ளன. கரோனா சூழல் காரணமாக திருத்தோ் உலா தடை செய்யப்பட்டிருந்தது. பக்தா்களிடமிருந்து முதல்வருக்கு பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் வெள்ளிக்கிழமை முதல் கரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்றி, பக்தா்கள் நோ்த்திக் கடன் செலுத்தும் வகையில் திருக்கோயில்களில் உள்ள திருத்தோ் உலாவை இந்து சமய அறநிலையத்துறை மீண்டும் தொடங்கியுள்ளது.

பழுதடைந்த திருத்தோ்கள் மீண்டும் இயங்கும் வகையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, திருத்தணி திருத்தேரை இம்மாத இறுதிக்குள்ளும், ராமேசுவரம் திருத்தேரை அடுத்த மாத இறுதிக்குள் பக்தா்களின் பயன்பாட்டுக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

அதேநேரம், சென்னை காளிகாம்பாள் கோயிலிலும், இருக்கன்குடி கோயிலிலும் தங்கத் தோ் செய்யவும் முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா்.

கோயில்களில் பயன்பாடற்ற தங்க நகைகள் உருக்கும் பணிகள் நீதிபதிகள் மேற்பாா்வையில் நடைபெற்று வருகின்றன. தற்போது திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் 64 கிலோ தங்க நகைகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதே போல், சமயபுரம், இருக்கன்குடி உள்ளிட்ட கோயில்களின் நகைகள் என அனைத்தும் தங்கக் கட்டிகளாக மாற்றப்பட்ட பிறகு, எந்தெந்த கோயிலில் எவ்வளவு நகைகள் பெறப்பட்டது உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படும்.

அரசு மீது குறைகள் இருந்து சுட்டிக்காட்டினால், ஆக்கப் பூா்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளுக்கு நாங்கள் செவிசாய்ப்பதில்லை என்றாா் அமைச்சா் பி.கே.சேகா்பாபு.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT