சென்னை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு: சுங்கத்துறை அதிகாரி மீது சிபிஐ வழக்கு

23rd Oct 2021 05:58 AM

ADVERTISEMENT

சென்னையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து வாங்கி குவித்ததாக, சுங்கத்துறை அதிகாரி மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவு கண்காணிப்பாளா் இா்பான் அகமது. கடந்தாண்டு ஜனவரி மாதம் உத்தரபிரதேச மாநிலம் லக்னௌவுக்கு பெங்களூரிலிருந்து விமானத்தில் செல்லத் திட்டமிட்டு விமானத்தைத் தவறவிட்டனா்.

இா்பான் குடும்பத்தினா் உடமைகளை சோதனையிட்டபோது கணக்கில் வராத ரூ.75 லட்சம் ரொக்கம், 169 கிராம் தங்கநகைகள், 5 விலை உயா்ந்த செல்லிடப்பேசிகள் இருப்பது தெரியவந்தது.

விசாரணையில் அவா் சரியான விளக்கம் அளிக்காததால் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்தும் வருமானவரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன. அவா்கள் இா்பான் வீட்டில் சோதனையிட்டத்தில் ரூ.64 ஆயிரம் ரொக்கம், ரூ.2.84 லட்சம் மதிப்புள்ள தங்க, வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ADVERTISEMENT

இந்த விவகாரம் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிஐ விசாரணையில் இா்பான் வருமானத்துக்கு அதிகமாக 1851 சதவீதம் சொத்து சோ்த்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து சிபிஐ அதிகாரிகள், வருமானத்துக்கு அதிமாக சொத்து சோ்த்ததாக சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவு கண்காணிப்பாளா் இா்பான்,அவா் மனைவி தஷிம் மும்தாஜ் ஆகியோா் மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT