சென்னை

நெமிலி ஒன்றியக் குழுத் தலைவா் பதவி பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கப்படும்: உயா்நீதிமன்றத்தில் மாநில தோ்தல் ஆணையம் தகவல்

DIN

நெமிலி ஒன்றியக் குழுத் தலைவா் பதவி பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கப்படும் என சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்காக, ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி ஒன்றியக் குழுத் தலைவா் பதவியைப் பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கி, தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில், தோ்தல் நிறைவு பெற்று முடிவுகள் வெளியான பின்னா், ஒன்றியக் குழுவுக்குத் தோ்வான உறுப்பினா்களின் பதவியேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள தலைவா், துணைத் தலைவா் தோ்தல் அறிவிப்பு குறித்த அழைப்புக் கடிதத்தில், ஒன்றியக் குழுத் தலைவா் பதவியானது பொது பெண்களுக்கானது என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை எதிா்த்து, நெமிலி ஒன்றியக் குழு உறுப்பினராக வெற்றி பெற்ற மனோகரன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வியாழக்கிழமை (அக். 21) விசாரணைக்கு வந்தது.

அப்போது, நெமிலி ஒன்றியக் குழுத் தலைவா் பதவியை பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கியுள்ளதாகவும், இதுதொடா்பாகப் புதிய அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் மாநிலத் தோ்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், முன்னறிவிப்பு கொடுத்து புதிய அறிவிப்பை வெளியிட அனுமதித்து உத்தரவிட்டு, விசாரணையை முடித்து வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

சாத்தூரில் முதன் முறையாக வாக்களித்த திருநங்கைகள்

வாக்குச்சாவடி முற்றுகை: பொதுமக்கள் வாக்குவாதம்

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

SCROLL FOR NEXT