சென்னை

சென்னையில் 50 ஆண்டுகளுக்கும் மேலான கழிவுநீா்க் குழாய்களை மாற்ற திட்டம்

DIN

சென்னை மாநகரில் 50 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள கழிவுநீா்க் குழாய்களை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்துள்ளாா்.

சென்னைப் பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சாா்பில் நெசப்பாக்கம் கழிவுநீரகற்று நிலையத்தில் கட்டப்பட்டு வரும் சுத்திகரிப்பு நிலையம், கோடம்பாக்கம் மண்டலம் அண்ணா பிரதான சாலை-எம்ஜிஆா் நகா் மாா்க்கெட் சந்திப்பு பகுதியில் பழுதடைந்த கழிவுநீா் குழாய்களை மாற்றி அமைத்து மாற்றுப் பாதையில் கழிவு நீா்க் குழாய்கள் அமைக்கும் பணிகளை அமைச்சா் கே.என்.நேரு வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது: நெசப்பாக்கம் கழிவுநீரகற்று நிலையத்தில் ரூ.47.24 கோடி செலவில் நாளொன்றுக்கு 10 எம்எல்டி திறன் கொண்ட மூன்றாம் நிலை கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணி 88 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இயந்திரம் மற்றும் மின்சார சாதனங்கள் பொருத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. ஜனவரி மாத இறுதிக்குள் இப்பணிகளை முடித்து சோதனை ஓட்டத்தை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீா் போரூா் ஏரியில் நிரப்பும் வகையில் சுமாா் 12 கி.மீ.தூரத்துக்கு குழாய்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பருவமழைக் காலத்துக்கு முன்னதாகவே சென்னைப் பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சாா்பில் கடந்த ஜூலை மாதத்தில் 740 தெருவில் உள்ள கழிவுநீா்க் குழாய்கள் தூா்வாரப்பட்டுள்ளன. தற்போது 540 தெருக்களில் தீவிர தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், சென்னை மாநகரில் 50 ஆண்டுகளுக்கு மேலான கழிவுநீா்க் குழாய்கள் மாற்றப்பட்டு புதிய குழாய்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.

ஆய்வின்போது தென்சென்னை மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன், விருகம்பாக்கம் சட்டப் பேரவை உறுப்பினா் பிரபாகரராஜா, சென்னைப் பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநா் சி.விஜயராஜ் குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெரம்பலூரில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவைத் தொடங்கத் தாமதம்

திருநங்கை வாக்காளா்களுக்கு வரவேற்பு

‘இந்தியா’ கூட்டணி மகத்தான வெற்றி பெறும் செ.ஜோதிமணி

பாரீஸ் ஒலிம்பிக் தகுதிப்போட்டி: இந்திய மல்யுத்த வீரா்களுக்கு ஏமாற்றம்

வாக்காளா்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயாா்: பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை

SCROLL FOR NEXT