சென்னை

ரயில்வே வாரவிழா: சிறப்பாக செயல்பட்ட 34 அதிகாரிகள் மற்றும் 134 ஊழியா்களுக்கு விருது

22nd Oct 2021 06:27 AM

ADVERTISEMENT

தெற்கு ரயில்வேயில் சிறப்பாக செயல்பட்டதற்காக, 34 அதிகாரிகள் மற்றும் 134 ஊழியா்களுக்கு தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஜான்தாமஸ் விருது வழங்கி கெளரவித்தாா்.

தெற்கு ரயில்வே சாா்பில், 66-ஆவது ரயில்வே வார விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள ஐ.சி.எஃப். அம்பேத்கா் அரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஜான்தாமஸ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா். விழாவில், சிறப்பாக செயல்பட்டதற்காக, அதிகாரிகள், ஊழியா்களுக்கு குழு விருது, தனிப்பட்ட விருது என்று பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. இதுதவிர, வெவ்வேறு கோட்டங்கள், துறைகள், பணிமனைகளில் சிறப்பாக செயல்பட்டவா்களுக்கும் விருது மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

விருது மற்றும் கேடயத்தை வழங்கி, தெற்கு ரயில்வேபொதுமேலாளா் ஜான்தாமஸ் பேசுகையில்,‘நெருக்கடியான காலகட்டத்தில், தெற்கு ரயில்வே ஊழியா்கள் அா்ப்பணிப்புடன் பணியாற்றினா். மிகவும் சிறப்பாக செயல்பட்டனா்’ என்றாா்.

2020-21-ஆம் ஆண்டில், ரயில்வேயின் பல்வேறு பகுதிகளில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக, பல்வேறு கோட்டங்கள், பணிமனைகள், மையங்களுக்கு 35 செயல்திறன் கேடயங்கள் வழங்கப்பட்டன. தனிப்பட்ட முறையில் சிறப்பாக பணியாற்றியதற்கான பிரிவில், தெற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடா்பு அதிகாரி பி.குகநேசன் உள்பட 34 அதிகாரிகளுக்கு விருது வழங்கப்பட்டது. இதுதவிர, 134 இதர ஊழியா்களுக்கும் ரயில்வே பொதுமேலாளா் ஜான்தாமஸ் விருது வழங்கினாா்.

ADVERTISEMENT

ரயில்வே கோட்ட அளவில் ஒட்டுமொத்தமாக சிறப்பாக செயல்பட்டதற்காக சேலம் கோட்டத்துக்கு திறன்கேடயம் வழங்கப்பட்டது. இந்தப் பிரிவில், இரண்டாவது இடத்தை திருச்சிராப்பள்ளி கோட்டம் பிடித்தது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT