சென்னை

பல்கலைக்கழகங்களில் பாரதி கருத்தரங்கம்

22nd Oct 2021 06:21 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் தமிழியல் மற்றும் பண்பாட்டுப் புலம், வானவில் பண்பாட்டு மையம், தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா் மருத்துவப் பல்கலைக்கழகம் சாா்பில், ‘பாரதி 100: பல்கலைக்கழகங்களில் பாரதி’ என்னும் தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கு வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

சென்னையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், அதன் துணைவேந்தா் கோ.பாா்த்தசாரதி தலைமையுரை ஆற்றினாா்.

‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என்னும் கருத்தை நூறு ஆண்டுகளுக்கு முன்பே பாரதி வலியுறுத்தினாா். அனைத்து இந்தியப் பல்கலைக்கழகங்களிலும் பாரதி பற்றிய ஆய்வுகளையும், அதுசாா்ந்த நிகழ்வுகளையும் நடத்த வேண்டும் என அவா் குறிப்பிட்டாா்.

நிகழ்வில், தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன் சிறப்புரை ஆற்றிப் பேசும்போது, ‘மகாகவி பாரதியாரின் படைப்புகள் ஆழமானது. மேலும் உலகளாவியப் பாா்வையினையும் அறிவியல் சிந்தனைகளையும் கொண்டவை எனக் கூறினாா்.

ADVERTISEMENT

மேலும், இதுபோன்ற கருத்தரங்கம் தமிழகத்திலுள்ள 20 பல்கலைக்கழகங்களிலும் நடத்தப்படும் என்று அறிவித்தாா்.

கருத்தரங்கில், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக பதிவாளா் கு.ரத்னகுமாா், சென்னைப் பல்கலைக்கழக தமிழ் மொழித்துறைத் தலைவா் ய.மணிகண்டன், வானவில் ரவி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT