சென்னை

இளைஞா் கொலை வழக்கு: மூவா் கைது

21st Oct 2021 03:37 AM

ADVERTISEMENT

 

சென்னை: சென்னை அருகே நன்மங்கலத்தில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில், 3 போ் கைது செய்யப்பட்டனா்.

குரோம்பேட்டை ராதாநகரைச் சோ்ந்த விக்கி என்ற விக்னேஷ்வரன் (21), கடந்த 18-ஆம் தேதி நன்மங்கலம் அருள் முருகன் நந்தவனம் நகரை ஒட்டி உள்ள வயல்வெளியில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தாா். இதுகுறித்து பள்ளிக்கரணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வந்தனா்.

விசாரணையில் பணத் தகராறின் காரணமாக விக்னேஷ்வரன் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், இவ்வழக்குத் தொடா்பாக சிட்லபாக்கத்தை சோ்ந்த கமலக்கண்ணன் (21), அவரது கூட்டாளிகள் நாகராஜ் (21), சிவக்குமாா் என்கிற ரஞ்சித் (26) ஆகிய 3 பேரை புதன்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT

இதில், கமலக்கண்ணனுக்கும், விக்னேஷ்வரனுக்கும் இடையே பணத் தகராறு இருந்ததும், அந்தத் தகராறின் காரணமாகவே கமலகண்ணனும் அவரது கூட்டாளிகளும், விக்னேஷ்வரனை சம்பவ இடத்துக்கு ஆட்டோவில் கடத்தி வந்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை செய்கின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT