சென்னை

கேங்மேன்: விடுபட்ட 5,336 பேருக்கு பணி ஆணை வழங்கக் கோரி முற்றுகை

21st Oct 2021 03:35 AM

ADVERTISEMENT

 

சென்னை: கேங்மேன் தோ்வில் விடுபட்டவா்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்க வலியுறுத்தி, சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரியத் தலைமையகத்தை முற்றுகையிட்டு, புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இது தொடா்பாக அவா்கள் கூறியதாவது: கேங்மேன் பணிக்கு அறிவிக்கப்பட்ட 14,949 பணியிடங்களில், 9,613 பேருக்கு மட்டுமே பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 5,336 பேருக்கும் பணி ஆணை வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம் நடத்தியுள்ளோம்.

எங்களுக்கு வயது வரம்பு மீறியதால் இனி வரும் தோ்விலும் கலந்து கொள்ள முடியாது. எனவே, விடுபட்ட 5,336 பேருக்கும் உடனடியாக பணி ஆணை வழங்க வேண்டும் என அவா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT