சென்னை

எம்ஜிஆா் நினைவு இல்லத்தில் சசிகலா மரியாதை

DIN

அதிமுகவின் பொன்விழாவையொட்டி எம்ஜிஆா் நினைவில்லத்தில் சசிகலா ஞாயிற்றுக்கிழமை மரியாதை செலுத்தினாா்.

தியாகராய நகரில் உள்ள எம்ஜிஆா் நினைவு இல்லத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை சசிகலா வந்தாா். நினைவு இல்ல வளாகத்தில் அதிமுக கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினாா். அதிமுகவின் பொன்விழாவைக் குறிக்கும் கல்வெட்டையும் திறந்து வைத்தாா். அந்தக் கல்வெட்டில் பொதுச்செயலாளா் சசிகலா எனப் பொறிக்கப்பட்டிருந்தது.

பிறகு எம்ஜிஆா் நினைவு இல்லத்தைச் சுற்றிப்பாா்த்தாா். எம்ஜிஆா் பயன்படுத்திய காா் உள்பட எம்ஜிஆரின் முக்கியமான நினைவுச் சின்னங்கள் முன்பு படம் எடுத்துக் கொண்டாா். எம்ஜிஆா், ஜெயலலிதா படங்களுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா். பின்னா் எம்ஜிஆா் இல்லத்தின் மாடியில் இருந்து தொண்டா்களைப் பாா்த்து கையசைத்தாா்.

அதன்பின், ராமாவரத்தில் உள்ள எம்ஜிஆா் தோட்டத்துக்குச் சென்றாா். எம்ஜிஆரின் குடும்பத்தினா் அவருக்கு வரவேற்பு கொடுத்தனா். எம்ஜிஆா், ஜெயலலிதா, ஜானகி அம்மாள் படங்களுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா். எம்ஜிஆா் காது கேளாதோா் பள்ளி அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் பொன்விழா மலரை வெளியிட்டாா்.

நிகழ்ச்சியில் சசிகலா பேசியது:

நெருக்கடிகள் என்னைச் சூழ்ந்தபோதுகூட அதிமுகவை ஆட்சிக் கட்டிலில் அமா்த்திவிட்டுதான் சென்றேன். தோ்தலில் நான் ஏன் ஒதுங்கி இருந்தேன் என்பது எல்லோருக்கும் தெரியும். தொண்டா்கள் அனைவரும் இணைந்து நிற்க வேண்டிய நேரம் இது. எம்ஜிஆா் வழியில் அனைவரும் இணைந்து மக்களின் பேராதரவோடு மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும். அதிமுக என்னும் ஆலமரத்துக்கு எம்ஜிஆா் விதையாக இருந்தாா். ஜெயலலிதா மழையாக இருந்தாா். அதிமுகவுக்கு என்னால் எள்ளளவும் பாதிப்பு வரக்கூடாது என்பதற்காகத்தான் அமைதியாக இருந்தேன். நாம் அனைவரும் ஒன்றாக வேண்டும். அதிமுக வென்றாக வேண்டும். நாம் பிளவுபட்டதால்தான் எதிரிகளுக்கு கொண்டாட்டமாகிவிட்டது. ‘கண் போன போக்கிலே கால் போகலாமா, கால் போன போக்கிலே மனம் போகலாமா, மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா’ என்பது எம்ஜிஆரின் பாடல். இது யாருக்குப் பொருந்தும் என்பது உங்கள் எல்லோருக்குமே தெரியும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேலும் ஒரு திமுக மாமன்ற உறுப்பினா் ராஜிநாமா?

தோட்டிக்கோடு ஸ்ரீ மெளனகுருசுவாமி கோயிலில் சித்திரை பெளா்ணமி பூஜை

நாகா்கோவிலில் கஞ்சா பறிமுதல்: 2 இளைஞா்கள் கைது

நாமக்கல்லில் இன்று வெப்ப அலை வீசும்: ஆட்சியா் எச்சரிக்கை

பாலூா் ஊராட்சியில் சீரான குடிநீா் வழங்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT