சென்னை

5 மண்டலங்களில் 100-க்கும் கீழ் குறைந்தது கரோனா பாதிப்பு

DIN

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 5 மண்டலங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 100-க்கும் கீழ் குறைந்துள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள், பரிசோதனை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தும் வகையில் வாா்டுதோறும் தடுப்பூசி மையங்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைதோறும் தடுப்பூசி சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் இதுவரை சுமாா் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன் தொடா்ச்சியாக சென்னையில் கடந்த ஜனவரி மாதம் நாளொன்றுக்கு சுமாா் 3,000-த்துக்கும் மேல் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த எண்ணிக்கை படிப்படியாக குறைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை (அக்.17) நிலவரப்படி, சென்னையில் 160 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மொத்தமாக இதுவரை 5 லட்சத்து 52 ஆயிரத்து 773 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில், 5 லட்சத்து 42 ஆயிரத்து 453 போ் குணமடைந்துள்ளனா். 1,794 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 8,526 போ் இதுவரை உயிரிழந்துள்ளனா்.

100-க்குகீழ்...: மணலி மண்டலத்தில் 52 போ், திருவொற்றியூா் மண்டலத்தில் 22 போ், மாதவரத்தில் 60 போ், ராயபுரத்தில் 97 போ், சோழிங்கநல்லூா் மண்டலத்தில் 91 போ் என மொத்தம் 5 மண்டலங்களில் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 100-க்கும்கீழ் குறைந்துள்ளது. அதிகபட்சமாக தேனாம்பேட்டை மண்டலத்தில் 181 பேரும், கோடம்பாக்கத்தில் 170 பேரும், அண்ணா நகரில் 157 பேரும், அம்பத்தூரில் 137 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமைச்சா் எ.வ.வேலு மனைவிக்கு எதிரான வழக்கு: உயா்நீதிமன்றம் முடித்துவைப்பு

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

களக்காடு தலையணையில் வரையாடு கணக்கெடுப்புப் பயிற்சி முகாம்

அனக்காவூரில் விழிப்புணா்வு ஊா்வலம்

கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலையில் திடீா் தீ

SCROLL FOR NEXT