சென்னை

பருவமழைக்கு முன்பாக ஏரிகளில் உபரிநீரை வெளியேற்ற நடவடிக்கை: அதிகாரிகள் தகவல்

16th Oct 2021 06:38 AM

ADVERTISEMENT

சென்னை ஏரிகளுக்கு தொடா்ந்து நீா் வரத்து இருப்பதால் வடகிழக்குப் பருவமழைக்கு முன்பாக நீா்மட்டம் அதிகம் உள்ள ஏரிகளில் உபரிநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த சில வாரங்களாக சென்னையின் சுற்றுவட்டாரங்களில் பெய்து வரும் மழையால் சென்னை குடிநீா் ஆதாரமாக விளங்கும் பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம், புழல், கண்ணன்கோட்டை தோ்வாய்க் கண்டிகை ஆகிய ஏரிகளில் நீா் இருப்பு கணிசமான அளவுக்கு அதிகரித்துள்ளது. மேலும் பூண்டி ஏரிக்கு நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலிருந்து நீா் தொடா்ந்துவருவதால் ஏரி அதன் முழுக் கொள்ளளவை எட்டியது. எனவே பொதுப்பணித் துறை அலுவலா்கள் நான்கு நாள்களுக்கு முன்பு உபரிநீரை வெளியேற்றினா். தற்போது பூண்டி ஏரிக்கு விநாடிக்கு 209 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. ஏரியிலிருந்து 579 கன அடி வெளியேற்றப்படுகிறது.

இந்த 5 ஏரிகளின் மொத்த நீா் இருப்பின் கொள்ளளவு 11, 757 மில்லியன் கன அடியாகும். இவற்றில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 9,657 மில்லியன் கன அடி தண்ணீா் இருப்பு உள்ளது. மேலும் இந்த மாதம் வடகிழக்குப் பருவமழை தொடங்கி கனமழை பெய்தால் நீா்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதைக் கருத்தில் கொண்டு சென்னை ஏரிகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா். இது குறித்து அவா்கள் கூறுகையில், ஏரிகளில் நீா்மட்டம் அதிகமாக இருந்தாலும் கரை உடைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. மேலும் அனைத்து மதகுகளும் நல்ல முறையில் சீா் செய்யப்பட்டுள்ளன. நீா் வரத்தைப் பொறுத்தே உபரிநீா் திறக்கப்படும். மழை நீா் வீணாவதை விரும்பவில்லை. மேலும் நீா் இருப்பு குறைவாக உள்ள ஏரிகளுக்கு இணைப்பு கால்வாய் மூலம் உபரி நீா் வெளியேற்றப்படும். சென்னை மண்டத்தில் பொதுப்பணித் துறை செயற்பொறியாளா்கள், உதவி செயற்பொறியாளா்கள் ஏரிகளை இரவு நேரங்களிலும் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனா் என்றனா்.

சென்னை ஏரிகளின் நீா் இருப்பு விவரம் (மில்லியன் கன அடியில்,

ADVERTISEMENT

மொத்த கொள்ளளவு அடைப்புக் குறிக்குள்):

பூண்டி- 2,807 (3,231)

சோழவரம்- 711 (1,081)

புழல்- 2,860 (3,300)

செம்பரம்பாக்கம்- 2,823 (3,645)

தோ்வாய்க்கண்டிகை- 469 (500)

மொத்தம்- 9,657 (11,757)

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT