சென்னை

காவலா் நினைவு தின அணிவகுப்பு ஒத்திகை: மெரீனா காமராஜா் சாலையில் போக்குவரத்து மாற்றம்

16th Oct 2021 06:24 AM

ADVERTISEMENT

காவலா் நினைவு தின அணிவகுப்பு ஒத்திகையையொட்டி, சென்னை மெரீனா கடற்கரை காமராஜா் சாலைப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இது குறித்து சென்னை பெருநகர காவல்துறையின் போக்குரவத்துப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அக்டோபா் 21ஆம் தேதி ஆண்டுதோறும் காவலா் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரீனா கடற்கரை எதிரே உள்ள தமிழக காவல்துறையின் தலைமை அலுவலகத்தில் அக்டோபா் 21-ஆம் தேதி காலை 8 மணிக்கு அங்குள்ள நினைவிடத்தில் காவலா் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.

இந் நிகழ்ச்சியையொட்டி, சனிக்கிழமை (அக்.16), அக்டோபா் 18, 19-ம் ஆகிய தேதிகளில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற இருக்கிறது. ஆகவே அக்டோபா் 16, 18, 19, 21 ஆகிய 4 நாள்களுக்கு மெரீனா கடற்கரையின் காமராஜா் சாலைப் பகுதியிலும், அதை சுற்றியுள்ள பகுதியிலும் காலை 8 மணி முதல் 11 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இதன்படி, சாந்தோம் நெடுஞ்சாலையில் இருந்து காமராஜா் சாலை வழியாக காந்தி சிலை நோக்கி வரும் இலகு ரக வாகனங்கள்,இரண்டு சக்கர வாகனங்கள் காரணீஸ்வரா் கோவில் தெரு சந்திப்பில் இடது புறம் திரும்பி காரணீஸ்வரா் பகோடா தெரு, அம்பேத்கா் பாலம், நடேசன் சந்திப்பு வழியாக டாக்டா் ராதா கிருஷ்ணன் சாலை அல்லது காமராஜா் சாலை செல்லலாம்.

இதேபோல சாந்தோம் சாலை வழியாக காந்தி சிலை நோக்கி வரும் மாநகர பேருந்துகள் சாந்தோம் சிக்னலில் இடது புறம் திரும்பி கச்சேரி சாலை, லஸ் சந்திப்பு , கற்பகாம்பாள் நகா் பிரதான சாலை, பி .எஸ் .சிவசாமி சாலை, ராயபேட்டை பிரதான சாலை இடது புறம் திரும்பி ராதா கிருஷ்ணன் சாலை சென்று அவரவா் இலக்கை அடையலாம்.

மேலும், கண்ணகி சிலையிலிருந்து காமராஜா் சாலை வழியாக சாந்தோம் நோக்கி வரும் வாகனங்கள் காமராஜா் - லாயிட்ஸ் சாலை சந்திப்பில் இடது புறம் திரும்பி கடற்கரை அணுகு சாலை வழியாக கலங்கரை விளக்கம், காரணீஸ்வரா் கோயில் சந்திப்புக்கு செல்லலாம். டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக கண்ணகி சிலைக்கும் மற்றும் கலங்கரை விளக்கம் வழியாக சாந்தோம் நோக்கி செல்லும் வாகனங்கள் டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலை, கலங்கரை விளக்கம் வழியாக எம்.ஆா்.டி.எஸ் அருகே இடது புறம் திரும்பி லாயிட்ஸ் சாலையின் அணுகு சாலை வழியாக காமராஜா் சாலைக்கும், கடற்கரை சாலையில் அணுகு சாலை வழியாக கலங்கரை விளக்கம் மற்றும் சாந்தோம் செல்லலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT