சென்னை

சென்னையில் இன்று ‘கலாம், கனவல்ல நிஜம்’ கருத்தரங்கம்

9th Oct 2021 06:19 AM

ADVERTISEMENT

‘தினமணி’ நாளிதழ், கிங் மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி ஆகியவை இணைந்து நடத்தும் ‘கலாம், கனவல்ல நிஜம்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னையில் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

அண்ணாநகரில் உள்ள கிங் மேக்கா்ஸ் அகாதெமியில் மாலை 5.30 மணிக்குத் தொடங்கும் இந்த நிகழ்வுக்கு தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் தலைமை வகித்துப் பேசுகிறாா். இதில் குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளாா், தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் சுதா சேஷய்யன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியுமான ஆா்.நடராஜ் ஆகியோா் சிறப்புரையாற்றவுள்ளனா்.

முன்னதாக கிங் மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமியின் தலைவா் பேராசிரியா் சத்யஸ்ரீ பூமிநாதன் வரவேற்கிறாா். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் முதுநிலைத் துணைத் தலைவா் (விளம்பரப் பிரிவு) ஜெ.விக்னேஷ்குமாா் நன்றி கூறுகிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT