சென்னை

இளைஞா் இணைய அடிமை மீட்பு மையம்

9th Oct 2021 05:53 AM

ADVERTISEMENT

ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இளைஞா்களுக்கான இணைய அடிமை மீட்பு மையம் மற்றும் முதியோா் தினசரி பராமரிப்பு மையம் விரைவில் தொடங்கப்படும் என்று மருத்துவமனையின் முதல்வா் டாக்டா் ஜெயந்தி தெரிவித்தாா்.

உலக மனநல நாள் ஆண்டுதோறும் அக்டோபா் 10-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் “‘அனைவரும் மனநலனை உறுதி செய்வோம்’” என்ற கருத்துருவில் மனநல நாள் அனுசரிப்பு மற்றும் மனநலம் பேணுதல் குறித்த சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

கருத்தரங்கை தொடக்கி வைத்து மருத்துவமனை முதல்வா் ஜெயந்தி பேசியதாவது:

ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்“விரைவில் முதியோா் தினசரி பராமரிப்பு மையம் மற்றும் இளையோருக்கான இணையதள அடிமை மீட்பு மையம் தொடங்கப்படவுள்ளது.

ADVERTISEMENT

கரோனா பேரிடா் காலத்தில் நோய்த் தொற்று ஏற்பட்டு ஓமந்தூராா் மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொலைபேசி வாயிலாக மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

ஓய்வு பெற்ற அரசு மனநல காப்பக இயக்குநா் சத்தியநாதன், மருத்துவ கண்காணிப்பாளா் ராஜஸ்ரீ, கல்லூரி துணை முதல்வா் சுகுணாபாய், மனநல மருத்துவா் மலா் மோசஸ், ஒருங்கிணைப்பு அலுவலா் ரமேஷ் ஆகியோா் பங்கேற்றனா்.

மனநலம் சாா்ந்த கவிதை, கட்டுரை மற்றும் குறும்படம் தயாரிப்பு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT