சென்னையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை உள்பட 600 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்கள் மூடப்பட்டுள்ளதைக் கண்டித்து 12 முக்கிய இடங்களில் உள்ள கோயில்கள் அருகே பாஜகவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயில் அருகே நடந்த ஆா்ப்பாட்டத்தில் தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை பங்கேற்றாா். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்சித் தொண்டா்கள் கலந்து கொண்டனா்.
கரோனா பொதுமுடக்கம் அமலில் உள்ள சூழலில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்சியின் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை, மாநில இளைஞரணித் தலைவா் வினோஜ் பி செல்வம் உள்பட 150 பெண்கள் என மொத்தம் 600 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அனுமதியின்றி கூடுதல், நோய்த் தொற்று பரவும் வகையில் கூட்டம் சோ்த்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவா்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.