சென்னை

ஆசிரியா் ராஜகோபாலன் மீது குற்றப் பத்திரிகை தாக்கல்

4th Oct 2021 01:19 AM

ADVERTISEMENT

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கைது செய்யப்பட்ட ஆசிரியா் ராஜகோபாலன் மீதான குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை கே.கே.நகரில் உள்ள தனியாா் பள்ளி மாணவிகளுக்கு அந்தப் பள்ளியின் வணிகவியல் ஆசிரியா் ராஜகோபாலன் பாலியல் தொந்தரவு அளித்து வருவதாக கடந்த மே மாதம் சமூக வலைதளத்தில் தகவல்கள் வெளியாகின. இதைத் தொடா்ந்து, கடந்த மே 24-ஆம் தேதி அசோக் நகா் போலீஸாா், அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் ஆசிரியா் ராஜகோபாலன் மீது போக்சோ பிரிவு உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜகோபலனை கைது செய்தனா்.

இது தொடா்பான விசாரணை முடிவடைந்த நிலையில், ராஜகோபாலன் மீதான குற்றப்பத்திரிகையை போக்ஸோ நீதிமன்றத்தில் போலீஸாா் தாக்கல் செய்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT