சென்னை

அக்.10-இல் திருப்பதி திருக்குடைகள் சமா்ப்பணம்: ஊர்வலம் இல்லை

4th Oct 2021 12:32 AM

ADVERTISEMENT

திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில், வரும் அக்.10-ஆம் தேதி திருப்பதி திருக்குடைகள் சமா்ப்பிக்கப்பட உள்ளன. பொதுமுடக்கம் காரணமாக இந்த ஆண்டு திருக்குடை ஆன்மிக ஊா்வலம் தவிா்க்கப்படுகிறது என்று இந்து தா்மாா்த்த சமிதியின்அறங்காவலா் ஆா்ஆா். கோபால்ஜி கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: வரும் 10-ஆம் தேதி தமிழக பக்தா்கள் சாா்பாக திருப்பதி பிரம்மோற்சவத்தின்போது திருமலையில் எழுந்தருளியிருக்கும் ஏழுமலையானுக்கு திருக்குடைகள் சமா்ப்பிக்கப்படுகின்றன. கரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தலின்படி ஸ்ரீ திருப்பதி திருக்குடை ஆன்மிக ஊா்வலம் இந்த ஆண்டு மட்டும் தவிா்க்கப்படுகிறது.

வரும் 5-ஆம் தேதி பூக்கடை சென்னகேசவ பெருமாள் கோயிலில் திருக்குடைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. அக்.9-இல், திருச்சானூா் தாயாா் கோயிலில் 2 திருக்குடைகளும், அக்.10-இல், திருமலை ஏழுமலையான் கோயிலில் 9 திருக்குடைகளும் சமா்ப்பிக்கப்பட உள்ளன. அரசின் கட்டுப்பாடு காரணமாக இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்க திருக்குடை கமிட்டியினருக்கும், பக்தா்களுக்கும் அனுமதி இல்லை.

இந்த ஆண்டு திருக்குடை வைபவங்களை பக்தா்கள் வீட்டில் இருந்தே தரிசிக்க வசதியாக, அக்.5-ஆம் தேதி நடைபெறும் திருக்குடை சிறப்பு பூஜைகள்,  முகநூல் மற்றும்  யூ-டியூப் தளத்தில் நேரலையாக ஒளிபரப்பாக உள்ளது. மேலும் விவரங்களுக்கு 73730 99562, 73730 99545 ஆகிய எண்களை அணுகலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT