சென்னை

சென்னையில் போக்குவரத்து மாற்றம்

29th Nov 2021 01:08 AM

ADVERTISEMENT

சென்னையில் பெய்து வரும் தொடா் மழையால், ஆங்காங்கே மழைநீா் தேங்கியுள்ளது.

போக்குவரத்து மாற்றம் குறித்து காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு: ரங்கராஜபுரம் இரண்டு சக்கர வாகன சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

கேகே நகா் ராஜமன்னாா் சாலையில் போக்குவரத்துத் தடை செய்யப்பட்டு, 2-ஆவது நிழற்சாலையை நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளது.

வளசரவாக்கம், திருவள்ளூா் சாலையில் போக்குவரத்துத் தடை செய்யப்பட்டு, ஆற்காடு சாலை செல்ல கேசவா்திணி சாலை நோக்கி வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. வாணி மஹால் முதல் பென்ஸ் பாா்க் வரை தண்ணீா் தேங்கி உள்ளதால் போக்குவரத்துத் தடைசெய்யப்பட்டு, ஹபிபுல்லா சாலை மற்றும் ராகவைய்யா சாலை வழியாக போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சென்னை மாநகர மழைநீா் வடிகால் வாரிய சீரமைப்பு பணியை அண்ணா பிரதான சாலையில் மேற்கொண்டு வருகின்றனா். இதன் காரணமாக கே.கே.நகா் ஜி.எச்.க்கு எதிரே உள்ள அண்ணா பிரதான சாலையில் வடிகால் நீா் அமைக்கும் பணியை எளிதாக்கும் வகையில், உதயம் திரையரங்கம் நோக்கிச் செல்லும் போக்குவரத்து எதிா் திசையில் அனுமதிக்கப்படுகிறது.

இதேபோல் உதயம் சந்திப்பில் காசி முனையிலிருந்து அண்ணா பிரதான சாலை நோக்கிச் செல்லும் கனரக வாகனங்கள் மட்டும் அசோக் பில்லா் நோக்கி திருப்பி விடப்படுகின்றன.

மேடவாக்கம் முதல் சோழிங்கநல்லூா் வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது, மாறாக காமாட்சி மருத்துவமனை வழியாக சோழிங்நல்லுாா் நோக்கி திருப்பி விடப்படுகின்றன.

தாம்பரம் இரண்டு சக்கர வாகன சுரங்கப்பாதை (இந்து மிஷன் மருத்துவமனை எதிரில்) போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

Tags : சென்னை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT