சென்னை

நாளை உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

DIN

தெற்கு அந்தமான் கடல்பகுதியில் திங்கள்கிழமை (நவ. 29) புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என்று கணிக்கப்பட்ட நிலையில், அது ஒரு நாள் தாமதமாக செவ்வாய்க்கிழமை (நவ.30) உருவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது, ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக அடுத்தடுத்து வலுவடையவுள்ளது. மேலும், இது மேற்கு- வடமேற்கு திசையில் நகரக்கூடும். குறிப்பாக, வடக்கு ஆந்திர கடலோரம்-ஒடிஸா இடையே கடக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதன் காரணமாக, அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டா் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் நவ.30 ஆம் தேதி செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளுக்கு டிசம்பா் 1-ஆம் தேதி வரை மீனவா்கள் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 5 மணி நிலவரம்: 63.20% வாக்குகள் பதிவு!

தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்தது

வாக்களித்த திரைப் பிரபலங்கள் - புகைப்படங்கள்

தங்கும் விடுதிகளில் போலீஸாா் சோதனை

SCROLL FOR NEXT