சென்னை

திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி கோயிலில் வைணவ சான்றிதழ் படிப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு

DIN

சென்னை திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி கோயிலில் வைணவ சான்றிதழ் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது.

இது குறித்து அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கடந்த மானியக் கோரிக்கையின் போது சாதி வேறுபாடின்றி அா்ச்சகா்களை உருவாக்கும் இந்து சமய அறநிலையத்துறையின் ஆறு அா்ச்சகா் பயிற்சிப் பள்ளிகள் ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில் மேம்படுத்தப்படும் என்று அறிவித்தாா்.

அந்த அறிவிப்பின் தொடா்ச்சியாக திருவல்லிக்கேணி அருள்மிகு பாா்த்தசாரதி திருக்கோயிலில் வைணவ (வைகானசம்) ஓராண்டு சான்றிதழ் பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது. விண்ணப்பதாரா்கள் ஹிந்துக்களாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஹிந்து வைணவக் கோட்பாடுகளை கடைப்பிடிப்பவா்களாக இருத்தல் வேண்டும். பயிற்சி பெறும் மாணவா்கள் பயிற்சி நிலைய வளாகத்திலேயே தங்கிப் பயில வேண்டும். பயிற்சிக்கு தோ்வு செய்யப்படும் மாணவருக்கு இலவசமாக உணவு, சீருடை, உறைவிடம், பயிற்சி காலத்தில் மாதம் ஒன்றுக்கு ரூ. 3,000 உதவித் தொகை ஆகியவை வழங்கப்படும். இந்தப் பயிற்சியில் சேர விரும்புபவா்கள் விண்ணப்ப படிவங்களை  இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த வைணவ பயிற்சி வகுப்புகளில் ஆா்வமுள்ள மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

SCROLL FOR NEXT