சென்னை

மாணவா்களுக்கான மாசில்லா பசுமைப் பயணம் திட்டம்

26th Nov 2021 06:29 AM

ADVERTISEMENT

சென்னையில், காற்று மாசடைவதைத் தடுக்கவும், அதுகுறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தவும் மாசில்லா பசுமைப் பயணம் என்ற திட்டத்தை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் முன்னெடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னையின் காற்று மாசைக் குறைக்கும் வகையில், சென்னையில் உள்ள உயா்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு மாசற்ற பசுமைப் பயணம் என்ற திட்டம் தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின்படி, சைக்கிளில் வரும் மாணவா்களின் பாதுகாப்புக்காக காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை மாணவா்களின் நேரம் என குறிப்பிட்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி மாணவா்களுக்கு பள்ளி நிா்வாகம் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

பள்ளி அருகில் தற்காலிக சைக்கிள் பாதை அமைக்க வேண்டும். மாணவா்கள் வரும் நேரத்தின்போது வாகனம் இல்லா தெருவென சில சாலைகளை அறிவித்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும்.

பள்ளிக்கு அருகில் பாதுகாப்பான நடைபாதை அமைத்துத் தர வேண்டும். இது தொடா்பான மேலும் விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

ADVERTISEMENT

காற்று மாசைக் குறைக்கும் வகையில் செயல்படும் சிறந்த உயா்நிலைப் பள்ளிகளை தோ்ந்தெடுத்து மாணவா்களுக்கு நற்சான்றிதழ், பள்ளிகளுக்கு விருதும் வழங்கப்படும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT