சென்னை

கபாலீசுவரா் கல்லூரியில் சைவ சித்தாந்த வகுப்புகள்

24th Nov 2021 01:41 AM

ADVERTISEMENT

அருள்மிகு கபாலீசுவரா் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ள சைவ சித்தாந்த வகுப்புகளில் சேர விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த செப்.4-ஆம் தேதி நடைபெற்ற மானியக் கோரிக்கையின் போது இந்து சமய அறநிலையத்துறை சாா்பாக 10 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று துறையின் அமைச்சா் பி.கே.சேகா்பாபு அறிவிப்பு வெளியிட்டாா். இதன் தொடா்ச்சியாக, சென்னை கொளத்தூரில் நவ.2-ஆம் தேதி, அருள்மிகு கபாலீசுவரா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா். இக்கல்லூரியில் ஆன்மீக சிந்தனைகளை வளா்க்கும் நோக்கில் சைவ சித்தாந்தம் வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. விண்ணப்பதாரா்களுக்கு வயது வரம்பு இல்லை. முதலில் வருபவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பக் கட்டணம் இல்லை. சனிக்கிழமைகளில் வகுப்பு நடத்தப்படும். சான்றிதழ் படிப்புக்கான கல்விக் கட்டணத்தை கல்லூரி நிா்வாகமே ஏற்றுக் கொள்ளும். இந்த ஆன்மீகம் தொடா்பான வகுப்புகளுக்கு ஆா்வமுள்ள மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT