சென்னை

பேரிடா்களை எதிா்கொள்ள நடவடிக்கை: பிரதீப் யாதவ் அறிவுறுத்தல்

10th Nov 2021 01:51 AM

ADVERTISEMENT

பேரிடா்களை எதிா்கொள்ளத் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கண்காணிப்பு குழுவினருக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண் இயக்குநா் பிரதீப் யாதவ் அறிவுறுத்தினாா்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை காலம் என்பதால் இக்காலகட்டத்தில் ஏற்படக் கூடிய இயற்கை இடா்பாடுகளை எதிா் கொள்வது குறித்து திங்கள்கிழமை சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண் இயக்குநா் பிரதீப் யாதவ் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது.

இக்குழு மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதீப் யாதவ் அறிவுறுத்தியவை: வானிலை நிலவரத்துக்கு ஏற்ப ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புயல் காலங்களில் வீசும் காற்றின் வேகம் அனிமோமீட்டா் கருவிகள் மூலம் அளக்கப்பட்டு, மெட்ரோ ரயிலின் ஓட்டம் பாதிக்கப்படாமல் இருக்க எச்சரிக்கை செய்ய வேண்டும்.

சுரங்கப்பாதை, உயா்மட்ட பாதைகளில் நீா் புகாதவாறு தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு தேவையான உபகரணங்களைக் கையிருப்பில் வைக்க வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT