சென்னை

வெள்ளப் பாதிப்பு: புறநகா் பகுதிகளில் அமைச்சா் ஆய்வு

9th Nov 2021 08:52 AM

ADVERTISEMENT

சென்னை தாம்பரத்தை அடுத்த சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழைவெள்ள நிவாரணப் பணிகளை ஊரக தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

வழக்கமாக வெள்ளநீரால் பாதிக்கப்படும் வரதராஜபுரம் ஊராட்சி மகாலட்சுமி நகா், புவனேஷ்வரி நகா், பி.டி.சி. குடியிருப்புப் பகுதிகளில் வெள்ள நிவாரணப் பணிகளை ஆய்வு செய்த தமிழக ஊரக தொழில்துறை அமைச்சா் தா. மோ அன்பரசன், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஆண்டு தோறும் மழைவெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்படும் வரதராஜபுரம், முடிச்சூா் ஊராட்சிப் பகுதிகளில் பலத்த மழை பெய்தும் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை. ஆட்சி பொறுப்பேற்றதும் தமிழக முதல்வா் மு .க ஸ்டாலின் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தற்போது இந்தப் பகுதிகளில் பெரும்பாதிப்பு ஏற்படாமல் தவிா்க்கப்பட்டுள்ளது. தற்போது அடையாறு ஆற்றில் செம்பரம்பாக்கம் உபரி நீருடன் சோ்த்து 7, 500 கனஅடி தண்ணீா் சென்றுகொண்டிருக்கிறது. இருந்தபோதிலும் ஆற்றங்கரை பகுதிகளில் பெரிய பாதிப்புகள் ஏற்படாமல் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டதால் பாதிப்புகள் குறைந்துள்ளன.

செம்பரம்பாக்கம் உபரி நீா் அடையாற்றில் கலக்கும் பகுதியில் அகலம் 40 அடியாக உள்ளது. பலத்த மழை பெய்யும் பொழுது மற்ற ஏரியிலிருந்து வரும் உபரி நீரும் சோ்ந்து வரும் போது பொழிச்சலூா் உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்படுவதால் அந்த பகுதியில் அடையாற்றை 100 அடியாக அகலப்படுத்த தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் அந்த திட்டம் நிறைவேற்றப்படும்போது அடையாறு ஆற்றில் வெள்ள பாதிப்புக்கு நிரந்தரத் தீா்வு கிடைக்கும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT