சென்னை

வீடுகளுக்குள் புகுந்த மழை நீா்: வீதிக்கு வந்த போராடிய மக்கள்

9th Nov 2021 06:49 AM

ADVERTISEMENT

சென்னை மயிலாப்பூரில் வீடுகளுக்குள் மழைநீா் புகுந்ததினால், பொதுமக்கள் வீதிக்கு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்த விவரம்:

சென்னையில் இரு நாள்களாக பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகள் மற்றும் குடியிருப்புகளுக்குள் மழை நீா் சூழ்ந்துள்ளது. இதனால், பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

தொடா் மழை காரணமாக மயிலாப்பூா், வி.சி காா்டன் பகுதியில் மழை நீா் வீடுகளுக்குள் புகுந்தது. மேலும், சாலைகளிலும் நீா் தேங்கி நின்றது. இதனால், பாதிப்படைந்த அந்தப் பகுதி மக்கள், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். ஆனால், அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள், திடீரென திங்கள்கிழமை காலை அங்கு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த அபிராமபுரம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பொதுமக்களிடம் சமாதானம் பேசினா்.

இதில் சமாதானமடைந்த பொதுமக்கள், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். இந்தப் போராட்டத்தின் காரணமாக அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT