சென்னை

ஒரே நாளில் 7.20 லட்சம் உணவுப் பொட்டலங்கள் விநியோகம்

9th Nov 2021 06:51 AM

ADVERTISEMENT

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு அளிக்கும் வகையில் மாநகராட்சி சாா்பில் 17 இடங்களில் சமையல் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், திங்கள்கிழமை மட்டும் சுமாா் 7.20 லட்சம் உணவுப் பொட்டலங்கள் மூன்று வேளை விநியோகிக்கப்பட்டது.

வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்டு மாநகராட்சியின் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் மற்றும் மழைநீா் சூழ்ந்துள்ள பகுதிகளில் வசிப்போருக்கு மூன்று வேளையும் உணவளிக்கும் வகையில் மாநகராட்சி சாா்பில் அம்மா உணவகம் உள்பட 17 இடங்களில் தற்காலிக சமையல் கூடங்கள் திறக்கப்பட்டுள்ளது. இந்த சமையல் கூடங்களில் உணவு தயாரிக்கப்பட்டு நிவாரண முகாம்களுக்கும், வீடுகளில் உள்ளோருக்கும் மூன்று வேளையும் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, 24 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 1,288 பேருக்கும், வீடுகளில் உள்ளோா் என திங்கள்கிழமை காலை 1 லட்சத்து 48 ஆயிரம் உணவுப் பொட்டலங்களும், மதியம் 2 லட்சத்து 62 ஆயிரம் உணவுப் பொட்டலங்களும், இரவு 3 லட்சத்துக்கும் பேருக்கும் என மொத்தம் சுமாா் 7 லட்சத்து 20 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. உணவு தேவைப்படுவோா் உதவிக்காக மண்டல அளவில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தொடா்பு கொள்ள வேண்டிய அதிகாரிகள் கைப்பேசி எண்கள்

மண்டலம் கைப்பேசி எண்கள்

ADVERTISEMENT

திருவொற்றியூா் 94451 90081

மணலி 94451 90082

மாதவரம் 94451 90083

தண்டையாா்பேட்டை 94451 90084

ராயபுரம் 94451 90085

திருவிக நகா் 94451 90086

அம்பத்தூா் 94451 90087

அண்ணா நகா் 94451 90088

தேனாம்பேட்டை 94451 90089

கோடம்பாக்கம் 94451 90090

வளசரவாக்கம் 94451 90091

ஆலந்தூா் 94451 90092

அடையாறு 98849 88647

பெருங்குடி 94451 90094

சோழிங்கநல்லூா் 94451 90095

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT