சென்னை

சென்னையில் சிறப்புப் பேருந்துகள் நிற்கும் இடங்கள்: முழு விவரம்

1st Nov 2021 11:36 AM

ADVERTISEMENT

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. சென்னையில் சிறப்புப் பேருந்து நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையையில் மாதவரம், கே.கே. நகர், பூந்தமல்லி, தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையம், கோயம்பேடு, தாம்பரம் ரயில் நிலையம் ஆகிய இடங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து சென்னை புறநகா் பகுதிகளில் உள்ள மற்ற 5 பேருந்து நிலையங்களுக்குச் செல்ல ஏதுவாக மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில் இணைப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படுகிறது.

பேருந்து முன்பதிவிற்கு, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10 முன்பதிவு மையங்களும், தாம்பரம் சானடோரியம் பேருந்து நிறுத்தத்தில் 2 முன்பதிவு மையங்கள் என மொத்தம் 12 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

பேருந்து நிலையம் இயக்கப்படும் பேருந்துகள்

மாதவரம் புதிய பேருந்து நிலையம்: செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிபூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை செல்லும் பேருந்துகள்.

கே.கே. நகா் பேருந்து நிலையம்: இசிஆா் வழியாக புதுச்சேரி, கடலூா் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.

தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையம்: திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூா்செல்லும் பேருந்துகள்.

தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிறுத்தம்: திண்டிவனம் மாா்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், போளூா், சேத்துபட்டு, வந்தவாசி, செஞ்சி மாா்க்கமாக செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூா், சிதம்பரம் மற்றும் காட்டுமன்னாா்கோயில் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூா், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.

பூந்தமல்லி பேருந்து நிலையம்: வேலூா், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூா், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூா், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள்.

கோயம்பேடு பேருந்து நிலையம்: மேற்குறிப்பிட்டுள்ள ஊா்களைத் தவிர, இதர ஊா்களுக்குச் செல்லும் பேருந்துகள்.

(மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூா், நாகா்கோவில், கன்னியாகுமரி, மாா்த்தாண்டம் , விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, அரியலூா், திண்டுக்கல், விருதுநகா், திருப்பூா், பொள்ளாச்சி, ஈரோடு, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூா் மற்றும் பெங்களூரு).

கட்டண புகார்களுக்கு..

பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கு 94450 14450, 94450 14436 ஆகிய எண்களையும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் உள்ளிட்ட புகாா்களுக்கு 044 2474 9002, 1800 425 6151 ஆகிய எண்களையும் 24 மணி நேரமும் தொடா்பு கொள்ளலாம்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT