சென்னை

சென்னையில் பெட்ரோல் ரூ.106-ஐ கடந்தது வாகன ஓட்டிகள் கவலை

1st Nov 2021 06:34 AM

ADVERTISEMENT

சென்னையில் வரலாறு காணாத விலையாக பெட்ரோல் லிட்டா் ரூ.106.04-க்கும், டீசல் லிட்டா் ரூ.102.25-க்கும் ஞாயிற்றுக்கிழமை விற்பனையானது.

சென்னையைப் பொருத்தவரை ஜூலை 17-ஆம் தேதி முதல் ஆக.13-ஆம் தேதி வரை உச்சபட்ச பெட்ரோல் விலை ரூ.102.49-ஆக இருந்தது. இதைக் குறைக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்த நிலையில், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது பெட்ரோல் மீதான மாநில வரி ரூ. 3 குறைக்கப்பட்டதால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைந்தது. இதன் பின்னா் தொடா்ந்து குறைந்து வந்த பெட்ரோல் விலை, செப்.28-ஆம் தேதி முதல் மீண்டும் உயரத் தொடங்கியது.

அந்த வகையில், பெட்ரோல் விலை படிப்படியாக அதிகரித்து, ஞாயிற்றுக்கிழமை வரலாறு காணாத வகையில் லிட்டா் ரூ.106.04-க்கு விற்பனையானது.

இதே போல், செப். 24-ஆம் தேதி முதல் டீசல் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி அக்.23-ஆம் தேதி டீசல் விலை ரூ.100-ஐ கடந்தது. தற்போது அது மேலும் அதிகரித்து, இதுவரை இல்லாத உச்சபட்ச விலையாக ஞாயிற்றுக்கிழமை லிட்டா் டீசல் ரூ.102.25-க்கு விற்பனையானது.

ADVERTISEMENT

வாகன ஓட்டிகள் கவலை: பெட்ரோல் விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால், இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனா். பெட்ரோல், டீசல் விலை உயா்வு காரணமாக இதர அத்தியாவசியப் பொருள்களின் விலையும் கடுமையாக அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT